Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ETERNAL நிகர லாபம் 2 மடங்காக உயர்வு

ETERNAL நிகர லாபம் 2  மடங்காக உயர்வு

சொமேட்டோ நிகர ஆர்டர் மதிப்பு 21.5% வளர்ந்து ரூ.11,445 கோடியானது. பிளிங்கிட்டின் விரைவு வர்த்தக நிகர ஆர்டர் மதிப்பு 79.3% அதிகரித்து ரூ.20,940 கோடியை எட்டியது.

பகிரவும் WhatsApp Facebook

சொமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல், செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் ரூ.125 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.65 கோடியாக இருந்த லாபம், வருவாய் வளர்ச்சியால் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.13,590 கோடியிலிருந்து ரூ.24,138 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தச் செலவினம் ரூ.13,813 கோடியிலிருந்து ரூ.24,166 கோடியாக உயர்ந்துள்ளது.

பிளிங்கிட் புதிதாக 308 கடைகளைச் சேர்த்துள்ளதால், அதன் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 2,751 ஆகியுள்ளது. இதனை 2027 மார்ச்சுக்குள் 3,500-க்கும் அதிகமாகவும், 2028 மார்ச்சுக்குள் சுமார் 5,000 ஆகவும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

சொமேட்டோ உணவு விநியோகத்தின் நிகர ஆர்டர் மதிப்பு 21.5 சதவீதம் வளர்ந்து ரூ.11,445 கோடியானது. பிளிங்கிட்டின் விரைவு வர்த்தக நிகர ஆர்டர் மதிப்பு 79.3 சதவீதம் அதிகரித்து ரூ.20,940 கோடியை எட்டியது. அதன் சரிசெய்யப்பட்ட வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் ரூ.184 கோடியாக இருந்தது.

உணவு விநியோகத்தில் ஆண்டுக்கு 20 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்தார். விரிவாக்கத்துக்குத் தேவையான நிதி வசதி உள்ளதாக நிதித் தலைவர் அக்ஷாந்த் கோயல் கூறினார். கடைகள் விரிவாக்கத்தின்போதும் லாப விகிதம் தொடர்ந்து மேம்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 பிளிங்கிட்டின் லாப விகிதம் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக மேம்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லாபம் 8.4% சரிவு
அடுத்த செய்தி
இரண்டாவது நாளாக சந்தைகள் வீழ்ச்சி

தொடர்புடைய செய்திகள்